மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து ஆந்திராவில் 9 பயணியர் உயிரிழப்பு
மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து ஆந்திராவில் 9 பயணியர் உயிரிழப்பு
ADDED : டிச 13, 2025 12:55 AM

சிந்துரு: ஆந்திராவின் அல்லுரி சீதாராம ராஜு மா வட்டத்தில், மலைப்பாதையில் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், ஒன்பது பேர் பலியாகினர்; 23 பேர் காயம் அடைந்தனர்.
ஆந்திராவின் சித்துார் பகுதியை சேர்ந்த, 37 பேர் மாநிலத்தி ன் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாநிலமான தெலுங்கானாவுக்கு பஸ்சில் ஆன்மிக பயணம் மேற்கொண்டனர்.
அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அரக்கு சமவெளிக்கும், தெலுங்கானாவின் பத்ராசலத்தில் உள்ள ஸ்ரீ ராமர் கோவிலுக்கும் முன்தினம் சென்றுவிட்டு, அன்னாவரம் நோக்கி நேற்று சென்றனர்.
நேற்று அதிகாலையில் சின்ட்டூர் - மரெடு மில்லி மலைப்பாதையில் சென்றபோது கடும் மூடுபனி நிலவியதால், முன்னால் இருந்த வளைவு தெரியாமல், தடுப்பு சுவரில் டிரைவர் பஸ்சை மோதினார்.
இதில் பஸ் தலைகுப்புற கவிழ்ந்ததில், ஒன்பது பயணியர் உயிரிழந்தனர்; 23 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு பிரத மர் மோடி இரங்கலை தெரிவித்துள்ளார்.
மே லும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா, 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தோருக்கு தலா, 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட் டுள்ளார்.

