ADDED : மே 03, 2025 08:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:புதுடில்லி ரயில் நிலைய 8வது வாயில் அருகே நேற்று காலை 7:55 மணிக்கு கேட்பாரற்றுக் கிடந்த பை கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய் படையினர் வந்து அந்தப் பையை சோதனையிட்டு அகற்றினர்.
தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்தனர். முதற்கட்ட சோதனையில் அந்தப்பைக்குள் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அந்தப் பை பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார், ரயில் நிலைய கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். விசாரணை நடக்கிறது. இதனால், ரயில் நிலையத்தில் நேற்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.