உலகின் மிக வயதான நபர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் 117வயது பிரேசில் பெண்!
உலகின் மிக வயதான நபர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் 117வயது பிரேசில் பெண்!
UPDATED : ஜன 06, 2025 08:49 AM
ADDED : ஜன 06, 2025 08:36 AM

பிரசிலியா: பிரேசிலைச் சேர்ந்த 117 வயதான கன்னியாஸ்திரி இனா கானபரோ லூகாஸ், உலகின் வயது முதிர்ந்த நபர் என்ற பெருமையை பெற்றார்.
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள புகுவோகாவை சேர்ந்தவர் கேன் தனகா, 119. உலகின் மிக வயதான நபர் என, 2019ல் இவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. அண்மையில், இவர் மரணம் அடைந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. பெற்றோருக்கு ஏழாவது குழந்தையாக பிறந்த இவர், தன் 19ம் வயதில் திருமணம் செய்து கொண்டார்.
ருசியான உணவுகளை உண்பது, தன் நீண்ட ஆயுளுக்கு காரணம் என, தனகா ஏற்கனவே கூறி உள்ளார். அவர் காலமான நிலையில், அவருக்கு அடுத்தபடியாக வயது முதிர்ந்தவர் ஆக இருப்பவர், பிரேசிலை சேர்ந்த கன்னியாஸ்திரி. கால் பந்தாட்டத்தை விரும்புபவர் ஆன, 117 வயது கன்னியாஸ்திரி கானபரோ லூகாஸ், இப்போது உலகின் வயதான நபராக கண்டறியப்பட்டுள்ளார்.
வேறு யாரேனும் இவரை விட வயதில் மூத்தவர்கள் இருக்கிறார்களா என்று கண்டறியும் ஆய்வும் நடந்து வருகிறது.
யார் இந்த கானபரோ லூகாஸ்? 
 
* தெற்கு பிரேசிலில் ஒரு பெரிய குடும்பத்தில் ஜூன் 8, 1908ம் ஆண்டு கானபரோ பிறந்தார். இவரது மருமகன் அவரது பிறப்பு இரண்டு வாரங்கள் தாமதமாக பதிவு செய்யப்பட்டது. அவர் மே 27ம் தேதி பிறந்ததாக கூறியுள்ளார்.
* இவர் உருகுவேயில் மதப் பணிகளை மேற்கொண்டார். பின்னர் ஜெனிரோவுக்குச் சென்று இறுதியில் தனது சொந்த மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் குடியேறினார்.
* 1964ம் ஆண்டும் முதல் 1985ம் ஆண்டு வரை ஆசிரியராக இருந்தார்.
* இவரது 110வது பிறந்தநாளை முன்னிட்டு போப் பிரான்சிஸால் கவுரவிக்கப்பட்டார்.
* இவர் கால்பந்தாட்டத்தை அதிகம் விரும்ப கூடியவர்.
ரகசியம் என்ன?
 
'நான் இளமையாக இருக்கிறேன், அழகாகவும் நட்பாகவும் இருக்கிறேன்' என அலெக்ரேவில் உள்ள தனது ஓய்வு இல்லத்திற்கு வருபவர்களிடம் கானபரோ லூகாஸ் தெரிவித்தார்.

