தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ரயில் மோதி இளைஞர் பரிதாப பலி

ரயில் மோதி இளைஞர் பரிதாப பலி

ரயில் மோதி இளைஞர் பரிதாப பலி


ADDED : மார் 06, 2024 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு : மனைவியுடன் மொபைல் போனில் பேசியபடி, தண்டவாளத்தை கடந்தவர், ரயில் மோதி உயிரிழந்தார்.

பீஹாரை சேர்ந்தவர் மனுகுமார், 27. இவர் மைசூரு, நஞ்சன்கூடின், தொட்ட கவலந்தே கிராமத்தில் வசித்தார். கார்பென்டராக பணியாற்றினார். திருமணமானவர். பணிக்கு சென்றபோது, மனைவியுடன் மொபைல் போனில் பேசுவது வழக்கம்.

நேற்று காலை 7:40 மணியளவில், பணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மனைவிக்கு வீடியோ கால் செய்து, பேசியபடியே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அதே வழியாக சாம்ராஜ்நகரில் இருந்து, மைசூருக்கு சென்ற ரயில் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த நஞ்சன்கூடு ரயில்வே போலீசார், உடலை மீட்டனர். வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us