தரன் தரன் சட்டசபை தொகுதிக்கு ஆம் ஆத்மி வேட்பாளர் அறிவிப்பு
தரன் தரன் சட்டசபை தொகுதிக்கு ஆம் ஆத்மி வேட்பாளர் அறிவிப்பு
ADDED : அக் 04, 2025 02:24 AM

சண்டிகர்:பஞ்சாப் மாநிலம் தரன் தரன் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில், ஆம் ஆத்மி வேட்பாளராக ஹர்மீத் சிங் சந்து அறிவிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாபின் தரன் தரன் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., கஷ்மீர் சிங் சோஹைல் ஜூன் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து, தரன் தரன் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டாலும், இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தரன் தரன் நகரில் நேற்று கிராமங்களை இணைக்கும் வகையில் சாலைகள் அமைக்கும் திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் பகவந்த் மான் பேசும் போது, இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக ஹர்மீத் சிங் சந்து போட்டியிடுவார் என அறிவித்தார்.
கடந்த 2002ம் ஆண்டு தரன் தரன் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற ஹர்மீத் சிங் சந்து, 2007 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் சிரோமணி அகாலி தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார்.
ஆனால், 2017 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜூலை மாதம் ஆம் ஆத்மி கட்சியில் ஹர்மீத் சிங் சந்து இணைந்தார்.