ஏ.ஏ.பி., தனித்துப்போட்டி காங்கிரஸ் கடும் அதிர்ச்சி
ஏ.ஏ.பி., தனித்துப்போட்டி காங்கிரஸ் கடும் அதிர்ச்சி
ADDED : அக் 09, 2024 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரோஸ் அவென்யூ, :வரும் டில்லி சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் நேற்று அறிவித்தார். அதீத நம்பிக்கை கொண்ட காங்கிரஸ் கட்சியையும், திமிர் பிடித்த பா.ஜ.,வையும் நாங்கள் தனித்து எதிர்த்துப் போராடும் திறன் கொண்டவர்கள் என, அவர் கூறினார்.
இந்த அறிவிப்பு, மாநில காங்கிஸ் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் நேற்றிரவு வரை எந்த கருத்தையும் அக்கட்சியினர் வெளியிடவில்லை.

