தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ., வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ., வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ., வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை


UPDATED : நவ 05, 2026 11:44 PM

ADDED : நவ 04, 2026 04:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:44 PM ADDED : நவ 04, 2026 04:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: அரசு சொத்துக்களை மோசடியாக அபகரித்தது, பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பஞ்சாப் மாநிலம், மோகா தொகுதி ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.எல்.ஏ., அமன்தீப் கவுர் அரோரா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

பஞ்சாப் மாநிலம், மோகா சட்டசபை தொகுதியின் ஆம் ஆத்மி கட்சியை பெண் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அமன்தீப் கவுர் அரோரா. அவரது கணவர் ராகேஷ் அரோரா போதை மீட்பு மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ‘754 ஏ’ தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட அரசு நிலங்களை, மோசடியாக பெயர் மாற்றம் செய்தது, மோகா மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டு தொகையில் முறைகேடு செய்தது தொடர்பாக, பஞ்சாப் போலீசார் கடந்த ஜூன் மாதம் வழக்கு பதிவு செய்தனர். இதன் அடிப்படையில், அமலாக்க இயக்குனரகமும், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமன்தீப் கவுர் அரோரா மீது வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், இவ்வழக்க தொடர்பாக, அமன்தீப் கவுர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில், நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். டாக்டர் ராகேஷ் அரோராவின் போதை மீட்பு மையத்திலும், சோதனை நடந்தது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாபில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அமலாக்கத்துறை நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us