தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/விமானப்படை விளையாட்டு வளாகம் காலவரையின்றி மூட உத்தரவு

விமானப்படை விளையாட்டு வளாகம் காலவரையின்றி மூட உத்தரவு

விமானப்படை விளையாட்டு வளாகம் காலவரையின்றி மூட உத்தரவு


UPDATED : அக் 29, 2026 10:33 PM

ADDED : அக் 29, 2026 10:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 10:33 PM ADDED : அக் 29, 2026 10:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: லோக் கல்யாண் மார்க்கில் உள்ள விமானப்படை தளத்திற்குள் அமைந்திருக்கும் விமானப்படை விளையாட்டு வளாகம் கால வரையின்றி மூடப்பட்டது.

பொதுத் தேவைக்காக நிலம் தேவைப்படுவதைக் காரணம் காட்டி, டில்லியின் லுட்டியன்ஸ் பகுதியில் உள்ள, டில்லி ஜிம்கானா கிளப், டில்லி ரேஸ் கிளப், ஜெய்ப்பூர் போலோ மைதானம் மற்றும் சுஜன் சிங் பூங்கா வளாகத்தின் ஒரு பகுதி உள்ளிட்ட, பல முக்கிய நிறுவனங்களை காலி செய்யுமாறு மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

டில்லி ஜிம்கானா கிளப், டில்லி ரேஸ் கிளப், ஜெய்ப்பூர் போலோ மைதானங்கள் ஆகியவற்றை, டில்லி நிலம் மற்றும் மேம்பாட்டு வாரியம் கையகப்படுத்தி உள்ளது. இந்நிலையில், லோக் கல்யாண் மார்க்கில் உள்ள, விமானப்படைத் தளத்திற்குள் அமைந்திருக்கும் விமானப்படை விளையாட்டு வளாகமும் காலவரையின்றி மூடப்பட்டது.

இந்த விளையாட்டு வளாகம், 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு, கோல்ப் மைதானம், நீச்சல் குளம், கூடைப்பந்து மைதானம், மூன்று உணவகங்கள், கூட்ட அறை மற்றும் விருந்து மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இங்கு 5,000 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் உள்ள கோல்ப் மைதானம், தலைநகரில் உள்ள பழமையானவற்றுள் ஒன்று.

இதற்கு விமானப்படை தரப்பில் அதிருப்தி எழுந்துள்ளது. இம்முடிவை மறுபரிசீலனை செய்ய விமானப்படை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ‘இந்த நிலத்தில் கோல்ப் மைதானம் மட்டுமல்லாமல், ‘அக்னிவீர்’ வீரர்களுக்கான பயிற்சி மற்றும் விளையாட்டு வசதிகளும் உள்ளன. எனவே, நிலம் முழுவதையும் ஆர்ஜிதப்படுத்தும் முடிவு, இங்கு பயிற்சி பெற்று வந்தவர்களின் மனநிலையை பாதிக்கும். எனவே, இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது’ என்று, விமானப்படை அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

மசூதியை அகற்ற


எதிர்த்து வழக்கு
டில்லியில், பிரதமர் இல்லம் அமைந்துள்ள, ‘7, லோக் கல்யாண் மார்க்’ பகுதிக்கு அருகில், 53 ஏக்கர் பரப்பளவில், ‘ரேஸ் கோர்ஸ் கிளப்’ அமைந்திருந்தது. இங்கு, வக்பு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட ரேஸ்கோர்ஸ் மஸ்ஜித் பாரம்பரிய சொத்தாக உள்ளது. ரேஸ்கோர்ஸ் கிளப்பை கையகப்படுத்திய மத்திய அரசு, இங்கு இருந்த 700க்கு மேற்பட்ட குடிசைப்பகுதிகளை அகற்றியது. ஜெயப்பூர் போலோ கிளப் மதைானம் மற்றும் டில்லி ரேஸ் கிளப் அடங்கிய இந்த நிலம் முழுவதும், டில்லி நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ரேஸ் கோர்ஸ் மஸ்ஜித் இடிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தில், இது தொடர்பாக டில்லி உயர் நீதிமன்றத்தில் வக்பு வாரியம் மூலம் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு நீதிபதி அனிஷ் தயால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஷிஷ் தீட்சித் அரசு தப்பில், ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அடுத்த நான்கு வாரத்தில் இந்த மசூதிக்கு எதிராக எந்தவிதமான கட்டாயமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us