ADDED : பிப் 29, 2024 11:24 PM
l நகரின் போக்குவரத்து நெரிசலை பரிசீலித்து, நீண்ட காலத்துக்கு தீர்வு கிடைக்கும் வகையில், 'பிராண்ட் பெங்களூரு - சீரான போக்குவரத்து' என்ற பெயரில், பெங்களூரு நகர விரிவான போக்குவரத்துத் திட்டம் தயாரிக்கப்படுகிறது. அதிக வாகன நெரிசல் கொண்ட இரண்டு இடங்களில், 200 கோடி ரூபாயில் சுரங்கப்பாதை அமைக்கப்படும்
l கனகபுரா முக்கிய சாலையில் இருந்து, பன்னரகட்டா முக்கிய சாலை மற்றும் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வரையிலும் சாலை மேம்படுத்துவதற்காக, ஹென்னுாரில் இருந்து, பாகலுார் சாலை வரை சாலை விரிவாக்கம் செய்யப்படும்.
சாம்ராஜ்பேட்டையின், பாதராயனபுரா சாலை மேம்படுத்தப்படும். இவ்விரு சாலை மேம்பாட்டுக்கு, 130 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
l மழைநீர் கால்வாய்களை ஒட்டியுள்ள இருபக்க சாலைகளில், இலகு ரக வாகனங்கள், சைக்கிள்கள், மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் 600 கோடி ரூபாய் செலவில், மூன்று ஆண்டுகளில் 300 கி.மீ., துாரம் சாலை மேம்பாடு செய்யப்படும். இந்தாண்டுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
l அரசின் 800 கோடி ரூபாய்; மாநகராட்சியின் 900 கோடி ரூபாய் செலவில் நகரில் 145 கி.மீ., துாரத்துக்கு, 2 ஆண்டுகளில் ஒயிட் டாப்பிங் எனும் சிமென்ட் சாலைகள் போடப்படும். இந்தாண்டுக்கு 300 கோடி ரூபாய் வழங்கப்படும்
l மக்கள் நடப்பதற்கு, 135 கோடி ரூபாயில் 45 கி.மீ., துாரத்துக்கு நடைபாதைகள்; சர். எம்.விஸ்வேஸ்வரய்யா ரயில்வே முனையத்தை இணைக்கும் வகையில், 380 கோடி ரூபாயில், வளைவு மேம்பாலம் அமைக்கப்படும்
l கண்ணாடி இழை மின்னணு வடங்கள் அமைப்பதற்கு தனிப் பாதை அமைக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய, 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு
l 100 கோடி ரூபாயில், மெட்ரோ டபுள் டக்கர் சாலைகள் அமைக்கப்படும்
l பனசங்கரி சதுக்கத்தில், 50 கோடி ரூபாயில், நடைமேம்பாலம், பி.எம்.டி.சி., பஸ் நிலையத்தை இணைக்கும் மின்னேற்றி அமைக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
l மாநகராட்சி விளையாட்டு மைதானங்களின் கீழ், வாகன நிறுத்தும் இடம் அமைக்க, 5 கோடி ரூபாய் வழங்கப்படும்
l நகரில் உள்ள மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள், 25 கோடி ரூபாயில் நிர்வகிக்கப்படும்
l ஒவ்வொரு வார்டிலும், வளர்ச்சிப் பணிகளுக்கு தலா 1.25 கோடி ரூபாய் வீதம் 225 வார்டுகளுக்கு 450 கோடி ரூபாய் வழங்கப்படும்.

