sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முன்னாள் பிரதமருக்கு பிடி வாரன்ட்

/

முன்னாள் பிரதமருக்கு பிடி வாரன்ட்

முன்னாள் பிரதமருக்கு பிடி வாரன்ட்

முன்னாள் பிரதமருக்கு பிடி வாரன்ட்


ADDED : அக் 18, 2024 12:57 AM

Google News

ADDED : அக் 18, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா, வங்கதேசம் உருவாக போராடிய ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஹசினா, 76. இவர், கடந்த 1996 முதல் 2001 வரையும், 2009 முதல் 2024 ஆகஸ்ட் வரையுமாக 20 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அவரது அவாமி லீக் கட்சியும், ஆட்சியும் இந்தியாவுக்கு நெருக்கமாக இருந்தன.

ஊழல், அடக்குமுறை அதிகரித்ததால் மாணவர்களை முன்னிலைப்படுத்தி போராட்டம் வெடித்தது. அது வன்முறையாக மாறியபோது, ஹசினா அரசின் உத்தரவுகளுக்கு ராணுவமும், போலீசும் பணியவில்லை.

இதனால் போராட்டக்காரர்களின் கை ஓங்கியது. ஹசினா அவசரமாக வெளியேறி இந்தியாவுக்கு வந்தார்; ரகசிய இடத்தில் அரசின் விருந்தாளியாக தங்கி இருக்கிறார்.

யூனுஸ் என்பவர் தலைமையில் வங்கதேசத்தில் தற்காலிக அரசு செயல்படுகிறது. ஹசினாவும், அவரது ஆதரவாளர்களும் ஆள் கடத்தல், என்கவுன்டர், கொலை, கொள்ளை என ஏராளமான குற்றங்களில் ஈடுபட்டதாக நாடு முழுதும் 100க்கும் மேலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவற்றை விசாரிக்க, சர்வதேச குற்றங்கள் விசாரணை நடுவம் என்ற அமைப்பை யூனுஸ் அரசு நிறுவியது. அதற்கு நீதிமன்ற அதிகாரம் தரப்பட்டுள்ளது. அந்த அமைப்பு தான் ஹசினாவுக்கும், அவருக்கு நெருக்கமான 45 பேருக்கும் வாரன்ட் பிறப்பித்துள்ளது.

விசாரணைக்காக ஹசினாவை ஒப்படைக்குமாறு இந்தியாவிடம் வங்க தேசம் கோரிக்கை வைக்கும். குற்றவாளிகளை அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான இரு தரப்பு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

அதன்படி, இரு நாடுகளும் பல குற்றவாளிகளை பரஸ்பரம் நாடு கடத்தியுள்ளன. ஆனால், அரசியல் குற்றங்கள் அந்த ஒப்பந்தத்தில் வரவில்லை.

தஞ்சம் கேட்டு வந்தவர்களை பிடித்துக் கொடுப்பதும் கிடையாது. சில நாடுகளில் ஹசினா அடைக்கலம் கேட்டுள்ளார். யாரும் இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்தியாவுக்கு இதுபோன்ற தர்மசங்கடம் உண்டாவது இதுவே முதல் தடவை. நெருங்கிய நட்புடன் இருந்தவரை திருப்பி அனுப்ப முடியாது; அனுப்ப மறுத்தால் அண்டை நாட்டு அரசுடன் உறவு பாதிக்கும். மோடி அரசு இந்த விவகாரத்தை எப்படி கையாள போகிறது என்பதை பல நாடுகள் ஆர்வமாக கவனிக்கின்றன.






      Dinamalar
      Follow us