செயற்கை நுண்ணறிவு டேட்டா சென்டர்கள்: 80 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் மைக்ரோசாப்ட்
செயற்கை நுண்ணறிவு டேட்டா சென்டர்கள்: 80 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் மைக்ரோசாப்ட்
ADDED : ஜன 05, 2025 01:09 PM

புதுடில்லி: இந்த ஆண்டு, செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை உருவாக்க, 80 பில்லியன் டாலரை செலவிட, மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உலக அறிவியல் வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ., தொழில்நுட்பம் மாறி வருகிறது. ஏ.ஐ., மனிதர்களின் வேலையை சுலபமாக்க உருவாக்கப்பட்டது. தற்போது அனைத்து துறைகளிலும் ஏ.ஐ., தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சமாளிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை உருவாக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு, 80 பில்லியன் டாலர் செலவிட உள்ளது.
இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பிராட் ஸ்மித் கூறியதாவது: இன்று அமெரிக்கா உலகளாவிய ஏ.ஐ., தொழில்நுட்ப பந்தயத்தில் முன்னணியில் உள்ளது. இதற்காக செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை உருவாக்க, 80 பில்லியன் டாலர் செலவிட உள்ளோம்.
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை கையாளுவதில் நாம் திறம்பட செயல்பட வேண்டும். பணிசுமைகளை குறைக்கும் வகையில் ஏ.ஐ., தரவு மையங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.