எம்.எல்.ஏ., மீது தாக்குதல் பா.ஜ., மீது குற்றச்சாட்டு
எம்.எல்.ஏ., மீது தாக்குதல் பா.ஜ., மீது குற்றச்சாட்டு
ADDED : பிப் 01, 2025 10:16 PM
புதுடில்லி:ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மொஹிந்தர் கோயல் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, தாக்கப்பட்டார்.
வடமேற்கு டில்லி ரித்தாலா தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். ரோகிணி பகுதியில் நேற்று காலை 11:00 மணிக்கு பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
அங்குள்ள 11வது செக்டாரில் உள்ள மக்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, சிலர் கோயல் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
ஆம் ஆத்மி தொண்டர்கள் கோயலை காப்பாற்ற முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தாக்குதலி மயங்கி விழுந்த கோயல், அருகிலுள்ள அம்பேத்கர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், இதுதொடர்பாக போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயலுக்கு எந்தக் காயமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், அதே தொகுதியில் கெஜ்ரிவால் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்துக்கு தலை மற்றும் கைகளில் கட்டுடன் சக்கர நாற்காலியில் கோயல் அழைத்து வரப்பட்டார்.
அப்போது, கெஜ்ரிவால் பேசும்போது, “தோல்வியை தெரிந்து கொண்டதால், பா.ஜ., வன்முறையில் இறங்கி விட்டது. இந்தப் போக்கிரி அரசியலை டில்லி மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். டில்லி மாநகரப் போலீசும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுகிறது.