உள்ளடக்கத்திற்கு செல்ல

பிச்சை எடுத்தார் ரூ.3,383 கோடி சொத்துள்ள பா.ஜ., - எம்.எல்.ஏ.,
பிச்சை எடுத்தார் ரூ.3,383 கோடி சொத்துள்ள பா.ஜ., - எம்.எல்.ஏ.,
ADDED : செப் 15, 2026 03:39 AM

அ நிறம் | அளவு
மும்பை: மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் மஹாயுதி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, காட்கோபர் கிழக்கு தொகுதியின் பா.ஜ., - எம்.எல்.ஏ., பராக் ஷா, 57, ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆவார்.
இவருக்கு, 3,383 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. ஜெயின் மதத்தின் புனிதகால வழிபாட்டின் போது, இவரது ஜெயின் ஆன்மிக குருவான நம்ரமுனி அறிவுறுத்தலின்படி, தன் ஆடம்பர சொத்துக்கள் மற்றும் வசதிகளை தற்காலிகமாக துறந்து, வீதிகளில் பிச்சைக்காரர் வேடத்தில் ஒரு நாள் முழுதும் வாழ்ந்தார்.
இதற்காக பராக் ஷா, முகத்தில் ஒப்பனை செய்து கொண்டு கிழிந்த ஆடைகளுடன் காட்கோபர் வீதிகளில் அமர்ந்து பிச்சை எடுத்தார். இதுதொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
