நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு; பெரியாறு புலிகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நேற்று முன்தினம் துவங்கியது. சரணாலயம் 30 பகுதிகளாக பிரிக்கப்பட்டு வனவிலங்கு கண்காணிப்பாளர்கள், வனக் கல்லூரி மாணவர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் என 70 பேர் கொண்ட தன்னார்வலர்கள், களப்பணியாளர்களின் ஒத்துழைப்புடன் கணக்கெடுப்பு நடக்கிறது.
புலிகள் சரணாலய உதவி கள இயக்குனர் சுரேஷ்பாபு கணக்கெடுப்பை துவக்கி வைத்தார். தேக்கடி வனத்துறை அதிகாரி சிபி, ஆராய்ச்சி அதிகாரி லிபின்ஜான் உள்பட பலரது தலைமையில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. நாளை (பிப்.1) கணக்கெடுப்பு நிறைவு பெறுகிறது.