பீஹாரில் பா.ஜ., கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு: லோக் ஜனசக்தி அதிருப்தி
பீஹாரில் பா.ஜ., கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு: லோக் ஜனசக்தி அதிருப்தி
ADDED : மார் 18, 2024 06:50 PM

பாட்னா: லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் பீஹாரில் தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது. இதில் லோக்ஜனசக்தி கட்சி அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இக்கூட்டணியில் முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லோக்ஜனசக்தி,ஹிந்துஸ்தான் அவாமிக் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பா.ஜ., 17 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும், லோக்ஜனசக்தி கட்சி 5 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தான் அவாமிக் மோர்ச்சா, மற்றொரு கட்சிக்கு தலா ஒரு தொகுதிகளில் போட்டியிடுவது என தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தொகுதி பங்கீட்டில் லோக்ஜனசக்தி கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் ராஜினாமா ?
முன்னதாக தங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் லோக்ஜனசக்தி கட்சி அதிருப்தி இருப்பதால் இக்கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் பா.ஜ., மேலிடத்தை சந்தித்து தனது அதிருப்தியை தெரிவிக்க உள்ளதாகவும், இக்கட்சியைச்சேர்ந்த மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சர் பசுபதி குமார் பரஸ், பிரதமர் மோடி அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்து அதிருப்தியை வெளிப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

