sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., கூட்டணி அபாரம்!: காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு பெரும் பின்னடைவு

/

மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., கூட்டணி அபாரம்!: காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு பெரும் பின்னடைவு

மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., கூட்டணி அபாரம்!: காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு பெரும் பின்னடைவு

மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., கூட்டணி அபாரம்!: காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு பெரும் பின்னடைவு

15


UPDATED : டிச 22, 2025 07:44 PM

ADDED : டிச 21, 2025 11:50 PM

Google News

15

UPDATED : டிச 22, 2025 07:44 PM ADDED : டிச 21, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிராவில், 246 நகராட்சிகள் மற்றும், 42 நகர பஞ்சாயத்துகள் என, மொத்தம் 288 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான ஆளும், 'மஹாயுதி' கூட்டணி, 212ல் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி, 48 உள்ளாட்சி அமைப்புகளை மட்டுமே கைப்பற்றி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., இடம் பெற்ற மஹாயுதி கூட்டணியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 246 நகராட்சிகள் மற்றும் 42 நகர பஞ்சாயத்துகள் என, மொத்தம் 288 உள்ளாட்சி அமைப்புகளுக்கு, கடந்த 2 மற்றும் 20ம் தேதிகளில், இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. 

இந்த தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., இடம் பெற்ற மஹா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 246 நகராட்சிகளில், ஆளும் மஹாயுதி கூட்டணி, 178ஐ கைப்பற்றி சாதித்துள்ளது. இதில், பா.ஜ., 100; துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா 45; மற்றொரு துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்., 33 நகராட்சிகளை கைப்பற்றி உள்ளன.

மஹா விகாஸ் அகாடி கூட்டணி, 41 நகராட்சிகளையே பிடித்துள்ளது. இதில், காங்., 26; உத்தவ் சிவசேனா ஏழு; தேசியவாத காங்., சரத் சந்திர பவார் பிரிவு எட்டு இடங்களிலும் வென்றுள்ளன. மற்ற 27 நகராட்சிகளை இதர கட்சிகள் கைப்பற்றி உள்ளன.

அதேபோல, 42 நகர பஞ்சாயத்துகளில், 34ஐ மஹாயுதி கூட்டணி கைப்பற்றி உள்ளது. பா.ஜ., 23; சிவசேனா எட்டு; தேசியவாத காங்.,3 நகர பஞ்சாயத்துகளிலும் வென்றுள்ளன. மஹா விகாஸ் அகாடி கூட்டணி, ஏழு பஞ்சாயத்துகளை மட்டுமே பிடித்துள்ளது.

கடந்தாண்டு சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் ஒரு முறை ஆளும் மஹாயுதி கூட்டணி தன் பலத்தை நிரூபித்துள்ளது.

மஹாயுதி கூட்டணி தரப்பில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர், மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அது, தற்போது அவர்களுக்கு கை கொடுத்துள்ளது.

ஆனால், மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் ஒருங்கிணைப்பே இல்லை. காங்., சில பகுதிகளில் கடுமையாக போராடினாலும், உத்தவ் சிவசேனா நிர்வாகிகள் களத்துக்கே வரவில்லை. சரத் பவார் தரப்பு நிர்வாகிகள், தங்கள் சொந்த தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தினர். இதுவே, அக்கூட்டணியின் தோல்விக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

மும்பை மாநகராட்சி தேர்தல்: காங்கிரஸ் தனித்து போட்டி


ஆசியாவிலேயே பணக்கார மாநகராட்சியான மும்பை உட்பட மஹாராஷ்டிராவில் உள்ள, 29 மாநகராட்சிகளின், 2,869 வார்டுகளுக்கு, 2026 ஜனவரி, 15ல், ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது; 16ல் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில், ''மும்பை மாநகராட்சி தேர்தலில், காங்., தனித்து போட்டியிடும்,'' என, மஹாராஷ்டிரா காங்., பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா நேற்று அறிவித்தார். இதனால், மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் சலசலப்பு உருவாகியுள்ளது.








      Dinamalar
      Follow us