ADDED : நவ 08, 2025 12:41 AM
புதுடில்லி: “பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு,”என, முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் கோயல் கூறினார்.
தெருநாய்கள் தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் பூங்கா, நெடுஞ்சாலை, மருத்துவமனை வளாகம், சுற்றுலா தலங்கள், பஸ் மற்றும் ரயில் நிலையம் உட்பட பொது இடங்களில் திரியும் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள, முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ., மூத்த தலைவருமான விஜய் கோயல் கூறியதாவது:
தெருநாய்கள் அகற்றப்படா விட்டால் சுற்றுலாத் துறை வீழ்ச்சி அடையும். டில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இரண்டு வெளிநாட்டு விளையாட்டு வீரர்களை தெருநாய்கள் கடித்தன.
நாய் பிரியர்கள் தெருவில் திரியும் நாய்களை தத்தெடுத்து தங்குமிடங்களில் பராமரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிகக்து.
இவ்வாறு அவர் கூறினார்.

