பெங்களூரு: லோக்சபா தேர்தல் ஆயத்தப் பணிகளை துவக்கி உள்ள பா.ஜ., மேலிடம், கர்நாடக தேர்தல் பொறுப்பாளர்கள், லோக்சபா தொகுதி பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில், கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களை, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உத்தரவின் பேரில், தேசிய பொதுச்செயலர் அருண் சிங் அறிவித்து உள்ளார்.
கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக ராதா மோகன்தாஸ் அகர்வால், இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளனர்.