ADDED : மார் 19, 2025 09:13 PM

பீதர்; பஸ் தீப்பிடித்ததில் 25க்கும் மேற்பட்ட பயணியர் உயிர் தப்பினர்.
பீதர் மாவட்ட பஸ் நிலையத்தில் இருந்து, 25க்கும் மேற்பட்ட பயணியருடன், அவுராத் நோக்கி கல்யாண கர்நாடக போக்குவரத்து கழக பஸ் புறப்பட்டது. கப்பிகரே என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, இன்ஜினில் இருந்து புகை வந்து உள்ளது. இதை பார்த்த ஓட்டுநர் ராஜ்குமார், நடத்துநர் பாலாஜியிடம் கூறி உள்ளார்.
ஓட்டுநர், பஸ்சை நடுரோட்டிலே நிறுத்திவிட்டு, அனைத்து பயணியரையும் பஸ்சில் இருந்து கீழே இறங்க வைத்தார். சிறிது நேரத்தில், அந்த புகை தீயாக உருமாறி, பஸ் தீப்பிடித்து எரிய துவங்கியது.
இது குறித்து, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். ஆனால், பஸ் முழுதும் எரிந்து நாசமானது. ஓட்டுநர், நடத்துநரின் சாமர்த்தியத்தால் 25க்கும் மேற்பட்ட பயணியரின் உயிர் காப்பாற்றப்பட்டது.