sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 பிரதமர் பெயரை தவறாக பயன்படுத்திய டில்லி நபர் மீது சி.பி.ஐ., வழக்கு

/

 பிரதமர் பெயரை தவறாக பயன்படுத்திய டில்லி நபர் மீது சி.பி.ஐ., வழக்கு

 பிரதமர் பெயரை தவறாக பயன்படுத்திய டில்லி நபர் மீது சி.பி.ஐ., வழக்கு

 பிரதமர் பெயரை தவறாக பயன்படுத்திய டில்லி நபர் மீது சி.பி.ஐ., வழக்கு


ADDED : ஜன 02, 2026 12:19 AM

Google News

ADDED : ஜன 02, 2026 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, அமெரிக்க ராணுவ தலைமையகமான, 'பென்டகன்' மற்றும் நம் இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ' போன்றவற்றுக்கு, போலி இ- - மெயில் அனுப்பிய டில்லியைச் சேர்ந்த நபர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த நிஷீத் கோலி என்பவர், இஸ்ரோ, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், பென்டகன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைப் பயன்படுத்தி இ - மெயில் அனுப்பியுள்ளார்.

அ தில், 'இந்தியாவின் அடுத்த தலைமுறை ராணுவ ஜெட் இன்ஜின் உருவாக்கத்தில் இந்திய அர சுக்கும், உங்களுக்கும் என்னால் உதவ முடியும் . இத்திட்டத்தை மேற்கொள்ள எனக்கு பிரதமர் மோடியின் ஆசிர்வாதமும், வாழ்த்தும் உள்ளது. பிரதமரின் முதன்மை செயலர் மிஸ்ராவின் ஆதரவும் எனக்கு உள்ளது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இ - மெயிலை, அமெரிக்க கடற்படை அதிகாரி வைஸ் அட்மிரல் ஜார்ஜ் விகோபுக்கும் அவர் அனுப்பி இருந்தார். அவர் இது குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிகள், போலி இ - மெயில் அனுப்பிய டில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த நிஷீத் கோலி என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us