ம.பி.,யின் நவ்ரதேஹியும் சிவிங்கி புலிகளின் சரணாலயமாகிறது
ம.பி.,யின் நவ்ரதேஹியும் சிவிங்கி புலிகளின் சரணாலயமாகிறது
ADDED : ஜன 02, 2026 12:19 AM
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ, காந்தி சாகர் சரணாலயங்களைத் தொடர்ந்து, நவ்ரதேஹி சரணாலயமும் சிவிங்கி புலிகளுக்கு அடைக்கலம் தரப்போகிறது.
நம் நாட்டில், 50 ஆண்டுக ளுக்கு முன் வாழ்ந்த சிவிங்கி புலிகளை மீட்டெடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக கடந்த, 2022 செப்டம்பரில், ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டன. இதைத் தொடர்ந்து, 2023 பிப்ரவரியில் தென்னாப்ரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் வரவழைக்கப்பட்டன.
தற்போது இந்தியாவில் பிறந்த, 19 குட்டிகள் உட்பட 30 சிவிங்கி புலிகள் உள்ளன. இதில், 27 மத்திய பிரதேசத்தின் குனோ பூங்காவிலும், மூன்று, காந்தி சாகர் சரணாலயத்திலும் உள்ளன.
ஆப்ரிக்க நாடான போஸ்ட்வானாவில் இருந்து, விரைவில் மேலும் எட்டு சிவிங்கி புலிகள் வரவுள்ளன. அவற்றை பராமரிக்க மத்திய பிரதேசத்தின் நவ்ரதேஹியில் மேலும் ஒரு சிவிங்கி புலி சரணாலயம் அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

