தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் திறன் மேம்பாட்டு பாடம் கட்டாயம்: சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவிப்பு

10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் திறன் மேம்பாட்டு பாடம் கட்டாயம்: சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவிப்பு

10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் திறன் மேம்பாட்டு பாடம் கட்டாயம்: சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவிப்பு


UPDATED : அக் 30, 2026 12:06 AM

ADDED : அக் 30, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 12:06 AM ADDED : அக் 30, 2026 12:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: பள்ளிக் கல்வியுடன் திறன் மேம்பாட்டையும் மாணவர்கள் வளர்த்துகொள்ளும் நோக்கில், 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில், திறன் மேம்பாட்டுப் பாடத்தை கட்டாயமாக்கி, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டை வளர்க்கும் நடவடிக்கையை சி.பி.எஸ்.இ., நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரும் 2027 – 28ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து சுற்றுச்சூழல் கல்வி பாடம் முழுமையாக நீக்கப்படும் என அறிவித்துள்ளது. இதேபோல் பொதுத்தேர்வுகளிலும் இந்தப் பாடத்திற்கான மதிப்பீடுகள் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளது.

அதற்கு பதிலாக, மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில், திறன் மேம்பாட்டுப் பாடம் இனி கட்டாயமாக்கப்படும் எனவும், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு திறன் சார்ந்த தொழில்நுட்பப் பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் எனவும் சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சி.பி.எஸ்.இ., நிர்வாகம் நேற்று வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்:

வரும், 2027 – 28ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில், மாணவர்கள் ஐந்து கட்டாயப் பாடங்களைப் படிக்க வேண்டும்; கூடுதலாக, ஒரு திறன் சார்ந்த பாடத்தையும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உண்டு. கணிதம், அறிவியல் அல்லது சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறத் தவறினாலும், இந்தத் திறன் சார்ந்த பாடத்தின் மூலம் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும். இது, நடப்பாண்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பொருந்தாது.

அறிவியல், சமூக அறிவியல் போன்ற முக்கியப் பாடங்களைப் போல், திறன் மேம்பாட்டுப் பாடங்களுக்கும் பள்ளி அளவிலான அக மதிப்பீடு மற்றும் செயல்முறைத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இதற்காக, பள்ளிப் பருவத்திலேயே ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தரவு அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற 22 நவீனப் பாடங்களில், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரு திறன் மேம்பாட்டு பயிற்சியை நிறைவு செய்ய வழிவகுக்கும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us