தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வண்ண குறியீடுடன் ஓட்டுநர் உரிமம் மத்திய அரசு திட்டம்

வண்ண குறியீடுடன் ஓட்டுநர் உரிமம் மத்திய அரசு திட்டம்

வண்ண குறியீடுடன் ஓட்டுநர் உரிமம் மத்திய அரசு திட்டம்


UPDATED : அக் 23, 2026 08:32 PM

ADDED : அக் 23, 2026 08:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 08:32 PM ADDED : அக் 23, 2026 08:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினருக்கு தனித்தனி நிறங்களில் ஓட்டுநர் உரிமங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்ய வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வாகன ஓட்டுதல் மதிப்பீட்டில், தேர்ச்சி மதிப்பெண்ணை உயர்த்துவது, சில சேவைகளுக்கு கட்டண விலக்கு அளிப்பது உள்ளிட்ட மாற்றங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. புதிய முன்மொழிவில் மேலும் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:

இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும் ஓட்டுநர் உரிமங்கள் வெவ்வேறு நிறங்களில் இருக்கும். வாகன ஓட்டுதல் தேர்வு குறைந்தது 30 நிமிடங்கள் நடைபெற வேண்டும் என்றும், அதற்கான மதிப்பீட்டில் தேர்ச்சி பெற 60 சதவீதத்துக்கு பதிலாக 75 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமத்தில் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை மாற்றக் கோரும் விண்ணப்பங்களுக்கு 15 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கவோ, நிராகரிக்கவோ வேண்டும். இதற்கான கட்டணத்தை நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வயது, முகவரிக்கான சான்றாக நிர்வாக மாஜிஸ்திரேட் அல்லது நோட்டரி முன் உறுதிமொழிப் பத்திரம் அளிக்கும் நடைமுறையை நீக்க திட்டம். ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, மின்னணு குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் அடையாளம், வயது, இருப்பிடச் சான்றுகளாகப் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us