திருப்பதியில் தேரோட்டம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்!
திருப்பதியில் தேரோட்டம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்!
ADDED : அக் 11, 2024 08:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இதில் இன்று(அக்.,11) தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, இன்று(அக்.,11) தேரோட்டம் நடைபெற்றது. தங்கக் குடையுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மலையப்ப சுவாமி பவனி வருகிறார்.
மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.