சுப்ரீம் கோர்ட் அடுத்த தலைமை நீதிபதி சூர்யகாந்த்; அரசுக்கு கவாய் பரிந்துரை
சுப்ரீம் கோர்ட் அடுத்த தலைமை நீதிபதி சூர்யகாந்த்; அரசுக்கு கவாய் பரிந்துரை
ADDED : அக் 27, 2025 11:51 AM

புதுடில்லி: சுப்ரீம்கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த்தை நியமிக்க மத்திய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி கவாய் பரிந்துரை செய்துள்ளார்.
சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி பிஆர் கவாய் மே 14ம் தேதி பதவியேற்றார். இவர் நவ., 24ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். தற்போது புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. தற்போது, அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த்தை நியமிக்க மத்திய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி கவாய் பரிந்துரை செய்து இருக்கிறார்.
தற்போதைய தலைமை நீதிபதி கவாய்க்குப் பிறகு இரண்டாவது மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதியான சூர்யகாந்த், நவம்பர் 24ம் தேதி 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு மே 24ம் தேதி சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற நீதிபதி சூர்யகாந்த், தலைமை நீதிபதியாக 14 மாதங்கள் பதவி வகிப்பார். அவர் 2027ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி ஓய்வு பெறுவார்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த சூர்யகாந்த்?
* நீதிபதி சூர்யகாந்த் தற்போது சுப்ரீம்கோர்ட்டின் மூத்த நீதிபதிகளில் ஒருவர். இவர் 1962ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி பிறந்தார். தற்போது சூர்யகாந்துக்கு வயது 63.
* ஹரியானாவில் பிறந்த சூர்யகாந்த் ஹிஸார் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் 1984ம் ஆண்டு வக்கீலாக தனது நீதித்துறை வாழ்க்கையை தொடங்கினார்.
* இவர் ஹரியானா மாநில அரசு சார்பில் வக்கீலாக பணியாற்றி இருக்கிறார். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.
* 2018ம் ஆண்டு ஹிமாச்சலப் பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். இவர் 2019ம் ஆண்டு மே 24ம் தேதி சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
*

