sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சினி கடலை

/

சினி கடலை

சினி கடலை

சினி கடலை


ADDED : மார் 21, 2025 03:49 AM

Google News

ADDED : மார் 21, 2025 03:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அனுபவம் புதுமை

நடிகர் யஷ் நடிப்பில் தயாராகும், டாக்சிக் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஹாலிவுட் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் கைல் பவுலும் ஒருவர்.

படப்பிடிப்பு அனுபவம் குறித்து அவர் கூறுகையில், ''இத்திரைப்படத்தில், உணர்ச்சி பூர்வமான காட்சிகள் உள்ளன. கன்னடத்தில் பேசியுள்ளேன். அந்த அற்புதமான அனுபவத்தை, என்னால் மறக்க முடியாது. நான் நடிப்பதற்கு இயக்குனர் கீது, அதிக ஒத்துழைப்பை கொடுத்தார். கால அவகாசம் கொடுத்து நடிக்க வைத்தார். என்னை ஊக்கப்படுத்தினார். இப்படிப்பட்ட படக்குழுவினருடன் பணியாற்றியது, மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

* நன்றிக்கடன்

நடிகர் சிவராஜ்குமாரின் மகள் நிவேதிதா, தயாரிப்பாளராக திரையுலகில் நுழைந்துள்ளார். இவர் தயாரித்த முதல் திரைப்படம் பயர் ப்ளை ஏப்ரல் 24ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதில் வம்ஷி நாயகனாக நடித்ததுடன், இயக்குனர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். ரச்சனா இந்தர் நாயகியாக நடித்துள்ளார்.

சிவராஜ்குமார் கூறுகையில், ''என் மகள் தயாரித்த முதல் படம், என் தந்தை ராஜ்குமாரின் பிறந்த நாள் அன்றே திரைக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. என் தந்தை மீதும், எங்கள் மீதும் ரசிகர்கள் காட்டிய அன்பை, எங்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறையிருக்கும் காட்டுகின்றனர். இதற்காக நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அனைத்து வயதினரும் பார்க்கும் வகையில், படம் தயாராகி உள்ளது,'' என்றார்.

* 'மர்டர் மிஸ்ட்ரி'

இயக்குனர் ஹேமந்த்ராவ், தனது படக்கம்பெனி மூலமாக தயாரிக்கும், முதல் திரைப்படம் அஞ்ஞானவாசி திரைக்கு வர, தயார் நிலையில் உள்ளது. சமீபத்தில் படத்தின் பாடல் வெளியிடப்பட்டது. பிரமோத் மரவந்தே எழுதிய அந்த பாடலை, சுனிதி கணேஷ் பாடினார். சரண்ராஜ் இசை அமைத்திருந்தார்.

படக்குழுவினர் கூறுகையில், 'படத்தில் ரங்காயனா ரகு, பாவனா கவுடா உட்பட பலர் நடித்துள்ளனர். 1997ல் மலைப் பகுதியில் நடந்த கொலை சம்பவத்தை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. கன்னடத்தில் இதுவரை வந்திராத மர்டர் மிஸ்ட்ரி கதையாகும்' என்றனர்.

* முதல் இயக்கம்

பெரும்பாலும் புதியவர்களே சேர்ந்து தயாரிக்கும், உஜ்ஜயினி மஹாகாலா திரைப்படம், திரைக்கு வர தயாராகிறது. இது குறித்து, இயக்குனர் ஹரிபிரசாத் கூறுகையில், ''15 ஆண்டுகளாக நான் திரையுலகில் இருக்கிறேன். இதுவே நான் இயக்கும் முதல் படமாகும். 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இது புராண கதை அல்ல. சஸ்பென்ஸ், திரில்லர் கதையாகும். அடுத்த கட்டத்தில் உஜ்ஜயினியில் படப்பிடிப்பு நடத்துவோம். மைசூரு சுற்றுப்பகுதிகளில் ஏற்கனவே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. வினய் நாயகனாகவும், அஸ்வினி நாயகியாகவும் நடித்துள்ளனர்,'' என்றார்.

* பத்திரிகையாளர் பாத்திரம்

நடிகர் உபேந்திராவின் அண்ணன் மகன் நிரஞ்சன் சுதீந்திரா நடிக்கும், ஸ்பார்க் திரைப்பட படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் ஆரம்பமாகிறது. இது தொடர்பாக, நிரஞ்சன் கூறுகையில், ''இதில், அபிராம் என்ற பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பெரும்பாலும் பெங்களூரிலேயே படப்பிடிப்பு நடக்கும்.

''பத்திரிகையாளர்கள் தீப்பொறி போன்றவர்கள். எந்த விஷயமாக இருந்தாலும், முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவது இவர்கள் தான். எங்கள் கதையிலும் அப்படிப்பட்ட தீப்பொறி உள்ளது. இதே காரணத்தால் படத்துக்கு, 'ஸ்பார்க் என பெயர் சூட்டப்பட்டது. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது,'' என்றார்.

* இருபதும், நாற்பதும்

தார்வாடை சேர்ந்த கல்கி அகஸ்தியா கதை, திரைக்கதை எழுதி இயக்குவதுடன், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அரிந்தம் திரைப்பட படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது. இது தொடர்பாக, அவரிடம் கேட்ட போது, ''படத்தில் ஸ்வேதா பட் நாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகின. இது, 2008ல் நடக்கும் கதையாகும். 20 வயது காளி என்ற இளைஞர், 40 வயது நபர் போன்று நடந்து கொள்கிறார்.

''குறைவாக பேசினாலும், அது அர்த்தமுள்ளதாக இருக்கும். சிறிய வயதில் தாயை இழந்த அவர், தன்னை சார்ந்தவர்களின் பாதுகாப்புக்காக போராடுகிறார். இதனால் அவருக்கு ஏற்படும் பாதிப்பு, அதிலிருந்து எப்படி விடுபடுகிறார் என்பதே, கதையின் சாராம்சமாகும்,'' என்றார்.

***






      Dinamalar
      Follow us