தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காங்கிரஸ் ராகுலுக்கு தி.மு.க., பகிரங்க கேள்வி

காங்கிரஸ் ராகுலுக்கு தி.மு.க., பகிரங்க கேள்வி

காங்கிரஸ் ராகுலுக்கு தி.மு.க., பகிரங்க கேள்வி

1


UPDATED : அக் 07, 2026 12:17 AM

ADDED : அக் 07, 2026 12:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 12:17 AM ADDED : அக் 07, 2026 12:14 AM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில், ராகுல் மவுனம் காப்பது ஏன்? அவரது நிலைப்பாடு என்ன?’ என, தி.மு.க., செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான சரவணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், எஸ்.ஐ.ஆர்., பணிகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளை கண்டித்தும், தலைநகர் டில்லியில், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் நேற்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தி.மு.க., செய்தித் தொடர்பாளர் சரவணன், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:

தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்., மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது பற்றி ராகுல் வாய் திறக்காதது ஏன்? இதில் அவரது நிலைப்பாடு என்ன?

‘எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பின், புதிதாக தேர்வான அனைத்து மாநில அரசுகளையும் கலைத்து, ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல்களை நடத்த வேண்டும்’ என, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ள கருத்தை ஆதரிக்கிறாரா, இல்லையா என்பதை ராகுல் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

காங்கிரசின் கூட்டணி கட்சியான த.வெ.க., மற்றும் முதல்வர் விஜய்க்கு பயந்து தான், தமிழக எஸ்.ஐ.ஆர்., விவகாரம் குறித்து பேச ராகுல் தயங்குகிறாரா? ஏன் இந்த இரட்டை வேடம்?

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us