ADDED : பிப் 09, 2024 07:22 AM

பரப்பன அக்ரஹாரா: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா அருகே, சிக்கனமங்களத்தில் வசித்தவர் அன்பரசன், 28. கூரியர் நிறுவனத்தில், மேலாளராக வேலை செய்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் அன்பரசனுக்கும், கணவரை விவாகரத்து செய்த, ஐ.டி., நிறுவன ஊழியர் வித்யா, 27, வுக்கும், கள்ளக்காதல் ஏற்பட்டது. தனியாக வாடகை வீடு எடுத்து கணவன், மனைவி போல வசித்தனர்.
இதற்கிடையில் வித்யாவுக்கு, சந்தோஷ் என்பவருடன், கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை, அன்பரசன் பார்த்து விட்டார். அதிர்ச்சி அடைந்த அவர், வித்யாவுடன் தகராறு செய்ததுடன், சந்தோஷுடனான கள்ளக்காதலை, கைவிடும்படி கூறி உள்ளார். ஆனால் வித்யா கேட்கவில்லை.
இதனால் மனம் உடைந்த அன்பரசன், நேற்று முன்தினம் இரவு வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
அன்பரசனை தற்கொலைக்கு துாண்டியதாக, சந்தோஷ், வித்யா மீது, பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

