பிரதமரின் தாய் குறித்த அவதூறு: வரும் 4ம் தேதி என்டிஏ மகளிர் அமைப்பினர் தர்ணா
பிரதமரின் தாய் குறித்த அவதூறு: வரும் 4ம் தேதி என்டிஏ மகளிர் அமைப்பினர் தர்ணா
UPDATED : செப் 02, 2025 09:31 PM
ADDED : செப் 02, 2025 09:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்னா: பிரதமரின் தாயை காங்கிரஸ் கட்சியினர் அவதூறு செய்ததை கண்டிக்கும் வகையில் என்டிஏ கூட்டணியின் மகளிர் அமைப்பினர் வரும் 4ம் தேதி 5 மணி நேரம் தர்ணா நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து பீகார் மாநில பா.ஜ., தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் கூறி இருப்பதாவது: தர்பங்காவில் நடந்த பேரணியின் போது காங்., ஆர்ஜேடி கட்சியினர் பிரதமரின் தாயாரை அவமதிக்கும் வகையில் அவதூறான வார்த்தைகளை கூறினர். இதனை என்டிஏ கூட்டணி தலைவர்களும் கடுமையாக கண்டித்தனர்.
இதன் அடுத்த கட்டமாக என்டிஏ கூட்டணியின் மகளிர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தர்ணா நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தர்ணா வரும் 4-ம் தேதி காலை 7 மணி முதல் நண்பகல் வரை தர்ணா நடத்தப்படும் என கூறினார்.

