டில்லியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2வது கட்ட பணிகள் ஜன., 10ல் தொடக்கம்
டில்லியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2வது கட்ட பணிகள் ஜன., 10ல் தொடக்கம்
UPDATED : அக் 22, 2026 05:29 PM
ADDED : அக் 22, 2026 05:24 PM
புதுடில்லி: டில்லியில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம், வரும் ஜன., 10ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
டில்லியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு முன்னதாக, வீடுகளைப் பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
டில்லியில்: ம் தேதியுடன் நிறைவடைந்த, மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணியில், 76 லட்சம் வீடுகள் மற்றும் 55 லட்சம் குடும்பங்கள் குறித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. இதில், டில்லியில் வழக்கமாக வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 2.3 கோடிக்கும் அதிகம் என்று கணக்கெடுப்பாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில், குடிமக்கள் பல்வேறு அம்சங்கள் குறித்த, 40 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். இதில் சாதி குறித்த விவரங்களும் அடங்கும். கடந்த 1931-ம் ஆண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, தற்போதுதான் சாதி குறித்த விவரங்கள் மீண்டும் சேகரிக்கப்படுகின்றன. இது தவிர மதம், பெற்றோரின் விவரங்கள், இடம்பெயர்வு, கல்வி மற்றும் தொழில் குறித்த தகவல்களும் சேகரிக்கப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்வித்தாளில் பெயர், பாலினம், பிறந்த தேதி, வயது, திருமண நிலை மற்றும் குடும்பத் தலைவருடனான உறவுமுறை போன்ற தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றன.
மேலும், தேசியம், மதம், பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து, மாற்றுத்திறன், தாய்மொழி மற்றும் தெரிந்த பிற மொழிகள் குறித்த தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
பதிலளிப்போரிடம், அவர்களின் கல்வித் தகுதிகள், வேலைவாய்ப்பு நிலை, தொழில், துறை மற்றும் தொழிலாளர் பிரிவு ஆகியவை குறித்தும் கேள்விகள் கேட்கப்படும். கேள்வித்தாளில், பிறந்த இடம், கடைசியாக வசித்த இடம், இடம்பெயர்வதற்கான காரணம் மற்றும் தற்போதைய இடத்தில் தங்கியிருக்கும் காலம் உள்ளிட்ட இடம்பெயர்வு விவரங்களும் அடங்கும்.
இந்தக் கேள்விகள், குழந்தைகளின் எண்ணிக்கை, வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை மற்றும் பதிலளிப்பவரிடம் மொபைல் போன் எண், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் உள்ளதா என்பது உள்பட, குடும்பம் மற்றும் நிதி விவரங்கள் வரை கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஆதார் மற்றும் பிற அடையாள விவரங்கள் இருந்தால் மட்டுமே கோரப்படும். ஆதார் அட்டையைச் சமர்ப்பிப்பது, அவரவர் விருப்பத்திற்குட்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம், வரும் ஜனவரி 10ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது. இதன்படி, ஜனவரி 25-ம் தேதி, வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி தொடங்குவதற்கு முன்னதாக, ஜனவரி 10 முதல் 24 வரை, மக்கள் தாங்களாகவே விவரங்களைப் பதிவு செய்துகொள்ள 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து, ஜன., 25 முதல் பிப்., 28 வரை களப்பணிகள் நடைபெறும். மார்ச் 1 முதல் 5 வரை தரவுகளைச் சரிபார்த்து திருத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும்.
