ADDED : ஏப் 26, 2025 12:28 AM

பஹல்காம் தாக்குதலில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர். பிரதமர் மோடி ஏற்கனவே இந்த தாக்குதல் தொடர்பாக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இந்த கொடூரமான செயலுக்கு பின்னால் உள்ளவர்களை நம் ராணுவம் உறுதியாக அழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அஜித் பவார்< மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்.,
பாக்., பாலைவனம் ஆகும்!
பஹல்காம் சம்பவம் காஷ்மீரில் சுற்றுலாவை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு பெரிய சதித்திட்டம். இதன் விளைவை பாகிஸ்தான் எதிர்கொள்ளும். நம் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் சிந்து நதி நீர் வினியோகத்தை நிறுத்த முடிவு எடுத்தனர். இதனால் பாகிஸ்தான் பாலைவனம் ஆகும்; குடிநீருக்கு தவிக்கும்.
ஷாநவாஸ் ஹுசைன், செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
அரசியல் பாகுபாடு வேண்டாம்!
காஷ்மீர் பயங்கரவாத சம்பவத்தை அனைவரும் கண்டிக்க வேண்டும். 26 குடும்பங்கள் தங்கள் மகன்களை இழந்துவிட்டன. பாகிஸ்தான் ஆதரவுடன் நடக்கும் பயங்கரவாத செயல்களை அரசியல் பாகுபாடு இன்றி ஒற்றுமையுடன் தடுத்து நிறுத்த வேண்டும். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
ரந்தீப் சுர்ஜேவாலா, ராஜ்யசபா எம்.பி., - காங்கிரஸ்

