தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/டில்லியில் போராட்டம் தி.மு.க., குழு பங்றே்பு

டில்லியில் போராட்டம் தி.மு.க., குழு பங்றே்பு

டில்லியில் போராட்டம் தி.மு.க., குழு பங்றே்பு


UPDATED : நவ 25, 2026 12:02 AM

ADDED : நவ 25, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 12:02 AM ADDED : நவ 25, 2026 12:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், அக்கட்சித் தலைவர் ஸ்டாலினை, அக்கட்சியின் எம்.பி., வில்சன் தலைமையில், சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

இது குறித்து வில்சன் கூறியதாவது:

கடந்த 1931ல், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மண்டல் கமிஷன் அமைத்து, 27 சதவீதம் இட ஒதுக்கீடு, நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டது.

தற்போது, அனைத்து மாநிலங்களிலும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை பெற, 90 ஆண்டுகளுக்கு பின், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி, வரும் 28ம் தேதி, டில்லியில் ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடக்கிறது.

இதில், ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் உட்பட, 50 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். தேசிய அளவில் அனைத்து கட்சிகளின் எம்.பி.,க்களும் கலந்து கொள்வர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us