ADDED : மார் 18, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐ.டி., - பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் நேற்று கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்வதாக, பா.ஜ.,வினர் விமர்சிக்கின்றனர். இவர்களுக்கு தைரியம் இருந்தால், எடியூரப்பா குடும்ப அரசியல் செய்வதாக கூறட்டும் பார்க்கலாம். பா.ஜ., வில் குடும்ப அரசியல் செய்யும், பல தலைவர்கள் உள்ளனர்.
பா,ஜ., தலைவர்களுக்கு என் செலவில், டி.என்.ஏ., பரிசோதனை செய்கிறேன். யார் குடும்ப அரசியல் செய்கின்றனர் என்பதை பார்த்து விடலாம். நீங்கள் நேர்மையானவர்களா என்பது தெரியும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

