தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கல்லுாரி மாணவியை கடித்து குதறிய நாய் உரிமையாளர்கள் மீது வழக்கு

கல்லுாரி மாணவியை கடித்து குதறிய நாய் உரிமையாளர்கள் மீது வழக்கு

கல்லுாரி மாணவியை கடித்து குதறிய நாய் உரிமையாளர்கள் மீது வழக்கு


UPDATED : அக் 23, 2026 07:02 PM

ADDED : அக் 23, 2026 06:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 07:02 PM ADDED : அக் 23, 2026 06:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரிதாபாத்: நடைபயிற்சி செய்து கொண்டிருந்த கல்லுாரி மாணவி, நாய் கடித்து பலத்த காயம் அடைந்தார். நாய் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஹரியானா மாநிலம், பரிதாபாத், 37வது செக்டார் அசோகா என்கிளேவில் வசிப்பவர், ஷ்ருஷ்டி சர்மா, 22. பி.டெக்., மாணவி.

கடந்த, 17ம் தேதி காலை, தன் பொமரேனியன் நாயுடன் நடைபயிற்சி சென்றார். அப்போது, ஒரு வீட்டுக்குள் இருந்து பாய்ந்து வந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய், ஷ்ருஷ்டி மீது பாய்ந்து கடித்துக் குதறியது. வலது கை மற்றும் இடுப்பில் பலத்த காயம் அடைந்தார்.

அலறல் கேட்டு வந்த ஷெப்பர் நாய் உரிமையாளர்கள், தங்கள் நாயை கட்டுப்படுத்தி வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷ்ருஷ்டிக்கு, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஷ்ருஷ்டி அளித்த புகார்படி, ஷெப்பர்ட் நாய் உரிமையாளர்கள் சிக்கந்தர் மற்றும் சுஷ்மா சர்மா ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கவனக்குறைவால் நாயை கட்டுப்பாடின்றி உலாவ விட்டதால், ஆறு மாதங்கள் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படலாம் என, போலீசார் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us