
மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில், எதிர்க் கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன. தேர்தலை உடனடியாக நடத்தக்கோரிய எதிர்க்கட்சியினர், தற்போது அதை ஒத்திவைக்கக் கோருகின்றனர். தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகள் இப்படி மாறி மாறி பேசுகின்றன. எந்த தேர்தல் வந்தாலும், நாங்கள் வெல்வோம்.
- ஏக்நாத் ஷிண்டே, மஹா., துணை முதல்வர், சிவசேனா
ஆதாரம் இல்லாமல் பேசாதீங்க!
பீஹார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, காங்கிரசுக்கு நிதி சேகரிக்கும் பணியில் கர்நாடகாவில் ஆளும் காங்., அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதாக பா.ஜ., தலைவர்கள் கூறுவது முற்றிலும் தவறு. எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், வாய்க்கு வந்தபடி பேசுவதை பா.ஜ.,வினர் நிறுத்த வேண்டும். இல்லை எனில், அவர் களுக்கு தா ன் பிரச்னை.
சிவகுமார் கர்நாடக துணை முதல்வர், காங்.,
மகனை சந்திக்க அனுமதி மறுப்பு!
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் ஆசியால், என் மகன் சைதன்யா சிறையில் இருக்கிறார். பண்டிகை நாட்களில், சிறையில் கைதிகளை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்படுவது வழக்கம். ஆனால், சிறையில் உள்ள என் மகனை, தீபாவளி நாளில் சந்திக்க அனுமதி மறுக்கின்றனர்.
பூபேஷ் பாகேல் மூத்த தலைவர், காங்.,