தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிட்டது இந்திய தேர்தல் கமிஷன்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிட்டது இந்திய தேர்தல் கமிஷன்
UPDATED : மார் 17, 2024 04:47 PM
ADDED : மார் 17, 2024 03:39 PM

புதுடில்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது. https://www.eci.gov.in/candidate-politicalparty என்ற இணையதளத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ., ரூ.6,986.5 கோடியும், பாரத் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி ரூ.1,322 கோடி, சமாஜ்வாதி கட்சி ரூ.14.05 கோடியும், அகாலிதளம் ரூ.7.26 கோடியும், தேசிய மாநாட்டு கட்சி ரூ.50 லட்சமும் பணம் பெற்றுள்ளன.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக, 2017ல் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, நம் நாட்டை சேர்ந்த தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், பணம் செலுத்தி தேர்தல் பத்திரங்களை வாங்கி, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். இப்படி நன்கொடை அளிப்பவர்களின் விபரம் எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் விற்கப்பட்டு ரகசியம் காக்கப்பட்டன.
இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது' என தீர்ப்பளித்தது. அது தொடர்பான தகவல்களை தேர்தல் கமிஷனுக்கு அளிக்க வேண்டும். அந்த விபரங்களை தன் இணையதளத்தில் தேர்தல் கமிஷன் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. முதல் பகுதி (பர்ஸ்ட் பார்ட்) 327 பக்கம் ஆகவும், 2வது பார்ட் 426 பக்கங்களை கொண்டதாகவும் உள்ளன.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, பர்ஸ்ட் பார்ட்டில் தேதி மற்றும் மாதம், ஆண்டு வாரியாக நன்கொடை தந்த நிறுவனங்கள் விவரங்களும், 2வது பார்ட்டில் தேதி, மாதம் ஆண்டு வாரியாக கட்சிகள் பணம் பெற்ற விவரங்களை தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் பதிவேற்றியது.
புதிய தரவுகள் வெளியீடு
இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் கமிஷன் இன்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
2018-19ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. https://www.eci.gov.in/candidate-politicalparty என்ற இணையதளத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
தி.மு.க.,வுக்கு ரூ.509 கோடி அள்ளிக்கொடுத்த மார்ட்டின்
தேர்தல் கமிஷன் வெளியிட்டு தரவுகளின் படி, தி.மு.க., பெற்ற மொத்த தேர்தல் நிதி 650 கோடி ரூபாயில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பியூச்சர் கேமிங் நிறுவனம் மட்டுமே 509 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. அ.தி.மு.க.,வுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 4 கோடி ரூபாய் தேர்தல் நிதி அளித்துள்ள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ., ரூ.6,986.5 கோடியும், பாரத் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி ரூ.1,322 கோடி, சமாஜ்வாதி கட்சி ரூ.14.05 கோடியும், அகாலிதளம் ரூ.7.26 கோடியும், தேசிய மாநாட்டு கட்சி ரூ.50 லட்சமும் பணம் பெற்றுள்ளன.
திரிணமுல் காங்கிரஸ் கட்சி ரூ.1,397 கோடியும், பிஜூ ஜனதா தளம் ரூ.944.5 கோடியும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ரூ.442.8 கோடியும், காங்கிரஸ் ரூ.1,334.35 கோடியும் பணம் பெற்றுள்ளன. 2019-20ம் ஆண்டில் அதிகபட்சமாக பணம் பெற்றுள்ள கட்சிகள் பட்டியலில் பா.ஜ., முதல் இடத்தில் உள்ளது. 2ம் இடத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி உள்ளது.
ஏற்கனவே, 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024ம் ஆண்டு பிப்,15ம் தேதி வரை பெற்ற தேர்தல் பத்திரங்கள் விவரங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

