ADDED : ஜூன் 25, 2025 02:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம்மறையூர் அருகே பாறையில் இருந்து தவறி கீழே விழுந்து ஆண் காட்டு யானை இறந்தது.
மறையூர் அருகே கரிமுட்டி நீர்வீழ்ச்சி அருகே விளை நிலத்தில் ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது. வனத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். அதில் பாறையில் இருந்து கால் தவறி கீழே விழுந்து இறந்ததாக தெரியவந்தது. தேக்கடியைச் சேர்ந்த வனவிலங்கு கால்நடை டாக்டர்கள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு அதன் வயதுஉள்ளிட்ட கூடுதல் விபரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் கூறினர்.