ADDED : நவ 20, 2025 11:46 PM

நக்சல்கள் வன்முறையை கைவிட்டு, நம் நாட்டின் முன்னேற்ற பாதையில் இணைந்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளால், நக்சல் ஒழிப்பு சாத்தியமாகும். சரணடைந்த நக்சல்கள், பழங்குடியின தலைவர்களின் கொள்கைகளை பின்பற்றி, வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்பும் விலைமதிப்பற்ற பங்களிப்பை செய்வர்.
திரவுபதி முர்மு ஜனாதிபதி
ஆபத்தான கட்டம்!
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை கட்டாயப்படுத்தப்பட்ட முறையில் நடத்தப்படுகிறது. இது மக்களையும், அதிகாரிகளையும் ஆபத்தான கட்டத்திற்கு தள்ளியுள்ளது. போதிய திட்டமிடல் இன்றி இதை மேற்கொள்வது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மம்தா பானர்ஜி மே. வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
எந்த இடையூறும் கூடாது!
பீஹார் முதல்வராக நிதிஷ் குமார், 10வது முறையாக பதவியேற்றதற்கு வாழ்த்துகள். எந்த இடையூறும் இன்றி, தன் பதவிக்காலத்தை அவர் நிறைவு செய்வார் என நம்புகிறேன். கடந்த, 20 ஆண்டுகளாக நிறைவேற்றாத ஏதாவது ஒரு வாக்குறுதியை அவர் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறேன்.
பவன் கெரா செய்தித்தொடர்பாளர், காங்.,

