நிதி மோசடி வழக்கு: ஆறு ஆண்டுகளில் 53 ஆயிரம் கோடி இழந்த இந்தியர்கள்
நிதி மோசடி வழக்கு: ஆறு ஆண்டுகளில் 53 ஆயிரம் கோடி இழந்த இந்தியர்கள்
ADDED : ஜன 03, 2026 01:34 AM

புதுடில்லி: நிதி மோசடி மற்றும் ஏமாற்று வழக்கு உள்ளி்ட்டவைகள் மூலம் இந்தியர்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் ரூ.53 ஆயிரம் கோடி வரையில் இழந்துள்ளனர். இழப்பில் மகா., முதல் மாநிலமாக உள்ளது.
சைபர் குற்றவியல் ஒருங்கிணைப்பு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: ஆன்லைன் மோசடிகள், வங்கி மோசடிகள்,டிஜிட்டல் கைது, உள்ளிட்டவை நாடு முழுவதும் நிதி குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் விரைவான டிஜிட்டல் மயமாக்கல், அதிகரித்த ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பம் ஆகியவை இந்தத் திடீர் அதிகரிப்பு மிகப்பெரிய இலக்குகளாக உள்ளது. அதே நேரத்தில் சிறிய நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
2025-ம் ஆண்டில் மட்டம் சுமார் ரூ.19,812.96 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.21,77,524 மோசடி குறித்த புகார்கள் பெறப்பட்டு உள்ளது. 2024-ல் ரூ.22,849.49 கோடி இழப்புகளும், 19,18,852 புகார்களும், 2023-ல் ரூ.7,463.2 கோடி இழப்புகளும்,13,10,361புகார்களும், 2022-ல் ரூ.2,290.23 கோடி இழப்புகளும், 69,44,46 புகார்களும்,2021-ல் ரூ. 551.65 கோடி இழப்புகளும்,2,62,846 புகார்களும், 2020-ல் ரூ.8.56 கோடி இழப்புகளும், 12,77,46 புகார்களும் பெறப்பட்டு உள்ளது.
மஹாராஷ்டிரா முதலிடம்
நாடு முழுவதும் நிதி மோசடி போன்ற ஏமாற்று தொடர்பான குற்றங்களில் மகாராஷ்டிரா மாநிலம் அதிகபட்ச பணத்தை இழந்துள்ளது. ரூ.3,203 கோடி இழப்பு 26,33,20 புகார்களுடன் முதலிடத்தில் உள்ளது.
தொடர்ந்து கர்நாடகா ரூ.2,413 கோடி இழப்புடன் 21,32,28 புகார்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
தமிழ்நாடு ரூ.1,897 கோடி இழப்புடன் 12,32,90புகார்களும்,உ.பி., ரூ.1,443 கோடி இழப்புடன் 27,52,64 புகார்களும்,தெலங்கானாவில் ரூ.1,372 கோடி இழப்புடன் 95 ஆயிரம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட முதல் ஐந்து மாநிலங்கள் நடந்துள்ள மோசடி சம்பவங்கள் நாட்டின் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் 50 சதவீதம் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மொத்த தொகையில் 77 சதவீதம் முதலீட்டு திட்டங்கள்பெயரிலும், 8 சதவீதம் டிஜிட்டல் கைது, கிரெடிட் கார்டு மோசடிமூலம் 7 சதவீதம், பாலியல் மிரட்டல் வழக்கு மூலம் 4 சதவீதம், மின் வணிக மோசடி மூலமாக 3 சதவீதம், மால்வேர் அடிப்படையிலான மோசடி ஒரு சதவீதம் அளவிற்கு நடந்தேறி உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

