UPDATED : அக் 06, 2011 12:31 PM
ADDED : அக் 06, 2011 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விசாகப்பட்டணம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் அருகே ரயில்வே ஊழியர்கள் பயணம் செய்த டிராலி எதிர்பாரத விதமாக விபத்தில் சிக்கியது.
இவ்விபத்தில் டிராலியில் பயணம செய்த ஊழியர்கள் ஐந்து பேர் பலியாயினர். விசாகப்பட்டணம் அருகே உள்ள கோதல்வாலசா-கிரந்தூல் ரயில்பாதையில் மின்சார பாதையை சரிசெய்யும் வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதே பாதையில் ரயில்வே ஊழியர்கள் பயணம் செய்த டிராலி ஒன்று பயணித்தது. எதிர்பாரத விதமாக டிராலி பழுது சரி செய்யும் வாகனத்தின் மீது மோதியது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியாயினர். காயமடைந்த மற்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். இவ்விபத்து குறித்த ரயில்வே நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

