404 பயணிகளுடன் வந்த விமானம் டில்லியில் அவசரமாக தரையிறக்கம்!
404 பயணிகளுடன் வந்த விமானம் டில்லியில் அவசரமாக தரையிறக்கம்!
ADDED : ஏப் 21, 2025 09:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி; ஜெட்டாவில் இருந்து 404 பயணிகளுடன் சென்ற விமானம், டில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
எஸ்வி758 என்ற விமானம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று(ஏப்.21) மாலை 5.20 மணியளவில் டில்லி விமான நிலையத்தின் 3வது முனையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு உடனடியாக தீயணைப்புத்துறை வாகனங்கள் விரைந்து சென்றன. என்ன காரணத்திற்காக விமானம் தரையிறக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.
பயணிகள், பணியாளர்கள் என அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக விமான நிலைய நிர்வாம் அறிவித்துள்ளது.

