நாட்டிலேயே முதன் முறையாக உ.பி.,யில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாக்குசாவடி அமைப்பு
நாட்டிலேயே முதன் முறையாக உ.பி.,யில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாக்குசாவடி அமைப்பு
UPDATED : மார் 17, 2024 09:01 PM
ADDED : மார் 17, 2024 08:40 PM

லக்னோ: நாட்டிலேயே முதன் முறையாக உ.பி.யில் அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் வாயில் காலனிகளில் வாக்குசாவடி அமைக்கப்படும் என மாநிலதேர்தல் அதிகாரி கூறினார்.
மாநில சட்டசபை தேர்தல்கள் உள்ளாட்சி அமைப்பு தேர்தல், பார்லி.தேர்தல் போன்றவற்றில் மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குசாவடி பெரும்பாலும் பள்ளிகளையே தேர்ந்தெடுப்பதே வழக்கம். ஆனால் உ.பி., மாநிலத்தில் இந்த முறை முதன் முறையாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குசாவடி அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து மநில தலைமை தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா கூறியதாவது: மாநிலத்தில் 217 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நுழைவாயில் காலனிகளை நாங்கள் கண்டறிந்து உள்ளோம். அதிகபட்சமாக தாத்ரி (68) நொய்டா (67) சாஷிபாபாத் (37), முராத்நகர் (8) மற்றும் லோனி, காசியாபாத் உள்ளிட்ட நகரங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
எந்த ஒரு வாக்காளரும் வாக்களிக்க 2 கி.மீ., க்கு மேல் பயணிக்க வேண்டியதில்லை என்ற எண்ணத்தில் வாக்களிக்கும் இடங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
மேலும் சுமார் 'சுமார் 82,000 வாக்குச் சாவடிகளில் நேரடி இணையதள வசதி இருக்கும். மேலும், அனைத்து வாக்குச் சாவடிகளும் தரை தளத்தில் இருப்பதை உறுதி செய்துள்ளோம். சக்கர நாற்காலி, மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சாய்வுதளம், கழிப்பறை, போதிய வெளிச்சம், குடிநீர், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

