பள்ளத்தில் வேன் கவிழ்ந்து நான்கு பக்தர்கள் உயிரிழப்பு
பள்ளத்தில் வேன் கவிழ்ந்து நான்கு பக்தர்கள் உயிரிழப்பு
ADDED : ஆக 15, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிம்லா: பஞ் சாப் மாநிலம், மோகா மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள், 30 பேர், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மாதா சாமுண்டா தேவி கோவிலுக்கு, பின்புறம் மூடப்படாத வேனில் சென்றனர். அங்கு தரிசனம் செய்து விட்டு, நேற்று காலை சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
சாமுண்டா - தரம்சாலா சாலையில், இக்கு மோட் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ஒரு பெண் உயிரிழந்தார்; 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மீட்புப் படையினர் உதவியை நாடிய போலீசார், காயம் அடைந்தவர்களை, அருகில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி, மேலும் மூவர் உயிரிழந்தனர். மற்றவர்கள், தொடர் சிகிச்சை பெற்று வ ருகின்றனர்.