2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
ADDED : மே 06, 2025 10:05 AM

சென்னை: சென்னையில் இன்று (மே 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (மே 03), ஆபரண தங்கம் கிராம், 8,755 ரூபாய்க்கும், சவரன், 70,040 ரூபாய்க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. நேற்று (மே 05) காலை தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 8,775 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 160 ரூபாய் உயர்ந்து, 70,200 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று மாலை தங்கம் விலை திடீரென மேலும், கிராமுக்கு 125 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 8,900 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,000 ரூபாய் உயர்ந்து, 71,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (மே 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025க்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.