sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 குருவாயூர் கோவில் உற்சவ விழா யானையோட்டத்துடன் துவக்கம்

/

 குருவாயூர் கோவில் உற்சவ விழா யானையோட்டத்துடன் துவக்கம்

 குருவாயூர் கோவில் உற்சவ விழா யானையோட்டத்துடன் துவக்கம்

 குருவாயூர் கோவில் உற்சவ விழா யானையோட்டத்துடன் துவக்கம்


ADDED : மார் 01, 2026 06:05 AM

Google News

ADDED : மார் 01, 2026 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தேவஸ்தானத்துக்கு சொந்தமான 36 யானைகளில், தேர்வு செய்யப்பட்ட மூன்று யானைகள் பங்கேற்ற யானையோட்டம் நடந்தது.

ரவி கிருஷ்ணன், பாலு, கிருஷ்ண நாராயணன் ஆகிய யானைகள் பங்கேற்றன. முதலில் ஓடி வந்த பாலு என்ற யானையை முந்தி, தெற்கு கோபுரம் வாசல் வழியாக கோவிலுக்குள் ஓடிவந்த ரவிகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பின் பங்கேற்ற ரவிகிருஷ்ணன், வெற்றி பெறுவது இரண்டாவது முறையாகும். இந்த யானை, ஏழு முறை வலம் வந்து மூலவரை வணங்கி நின்றது. பங்கேற்ற யானைகளுக்கு 'யானையூட்டு' (உணவு வழங்குதல்) நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

வரும் 10 நாட்கள் நடக்கும் விழாவில், ரவிகிருஷ்ணன் யானை மீது உற்சவர் பவனி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, காலையில் உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.






      Dinamalar
      Follow us