தரவுகளை தனியாருக்கு விற்ற கேரள அரசு: காங்., குற்றச்சாட்டு
தரவுகளை தனியாருக்கு விற்ற கேரள அரசு: காங்., குற்றச்சாட்டு
ADDED : மார் 01, 2026 06:30 AM

கொச்சி: 'ஸ்திரி சுரக் ஷா' திட்டத் தில் பயனடையும் லட்சக்கணக்கான பெண்களின் தனிப்பட்ட விபரங்களை, தேர்தல் தொடர்பான நடவடிக்கைக்காக தனியார் நிறுவனத்துக்கு கேரள அரசு கசிய விட்டதாக காங்., மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றஞ்சாட்டினார்.
கேரளாவில் மார்க்.கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜன நாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு அடுத்த மாதம் தமிழகத்துடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்கு, வேலைவாய்ப்பற்ற 35 - 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, 'ஸ்திரி சுரக் ஷா' திட்டத்தில், மாதம், 1,000 ரூபாயை மாநில அரசு வழங்கி வரு கிறது. இதன் மூலம், லட்சக் கணக்கான பெண்கள் பயனடைகின்றனர்.
இந்நிலையில், காங்., மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கொச்சியில் அளித்த பேட்டி:
ஸ்திரி சுரக் ஷா திட்டத்தில் பயனடையும் லட்சக்கணக்கான பெண்களின் தனிப்பட்ட விபரங்களை திருடி, தனியார் நிறுவனத் துக்கு கேரள அரசு கொடுத் துள்ளது. தேர்தல் பணிக்காக , ஆளும் இடது ஜன நாயக முன்னணி கூட்டணிக்கு இந்த தரவுகளை அரசு வழங்கி உள்ளது. இது மிக வும் கண்டனத்துக்குரியது.
இது போன்ற சம்பவம் இதற்கு முன் நடந்ததில்லை. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

