ADDED : மார் 01, 2026 06:32 AM
புதுச்சேரி: ஆன்லைன் வாயிலாக, புதுச்சேரி நபரிடம், 1.23 கோடி ரூபாயை ஏமாற்றிய மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.
புதுச்சேரி, பாகூரை சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, தெரிவித்தார்.
அதை உண்மை என நம்பி, மர்ம நபர் அனுப்பிய ஆன்லைன் வர்த்தக லிங்கில், பல்வேறு தவணைகளாக, ஒரு கோடியே 23 லட்சத்து 50,000 ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன் பின், மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரிந்தது.
இதேபோல, உறுவையாரைச் சேர்ந்தவர், 5,900, பாகூரைச் சேர்ந்தவர், 12,825 ரூபாய் என, 3 பேர் சைபர் மோசடி கும்பலிடம், ஒரு கோடியே 23 லட்சத்து 68,725 ரூபாய் ஏமாந்துள்ளனர். புகார்களில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
