ADDED : ஆக 10, 2025 09:25 PM

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தின், இட்டா நகரில் கவுகாத்தி உயர்நீதிமன்ற கிளையை தலைமை நீதிபதி கவாய் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:அருணாச்சலப் பிரதேசத்தில் 26 முக்கிய பழங்குடியினரும் 100க்கும் மேற்பட்ட துணைப் பழங்குடியினரும் உள்ளனர். ஒவ்வொரு பழங்குடியினரின் மரபுகள் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
எளிதில் நீதி
மக்களுக்கு சேவை செய்யவும், விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்யவுமே நீதிமன்றங்களும், சட்டசபைகளும் செயல்படுகின்றன. பணக்காரர்களுக்கும்,அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் மட்டுமே அவை இல்லை. சட்டசபை, நீதிமன்றத்தின் பங்கு பொது நலனுக்கு சேவை செய்வதாகும். நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு நீதித்துறை சேவைகளை எளிதில் அணுகக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.
கலாசாரம்
நீதியை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் அவர்கள் ஆற்றிய பணிக்காக குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் அடுத்தடுத்த தலைமை நீதிபதிகளை நான் பாராட்டுகிறேன். நமது மரபுகள் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாப்பதும் அரசியலமைப்பின் கீழ் நமது அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். இவ்வாறு தலைமை நீதிபதி கவாய் பேசினார்.