ADDED : ஏப் 23, 2025 03:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: மூன்றாவது மொழியாக ஹிந்தியை கட்டாயமாக்கும் உத்தரவை, மஹாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்துள்ளது.
மஹாராஷ்டிராவில், 1 - -5 வகுப்புகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயம் என்றும், மராத்தி மற்றும் ஆங்கிலவழிப் பள்ளிகளில் ஹிந்தி கற்றுத்தர வேண்டும் என்றும், மாநில அரசு உத்தரவிட்டது.
இந்த முடிவுக்கு, எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாநில கல்வி ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை ஏற்று, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான அரசு, மூன்றாவது மொழியாக ஹிந்தியை கட்டாயமாக்கும் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.