மாணவன் தற்கொலை விவகாரம் மனித உரிமை ஆணையம் விசாரணை
மாணவன் தற்கொலை விவகாரம் மனித உரிமை ஆணையம் விசாரணை
ADDED : நவ 23, 2025 01:09 AM
புதுடில்லி: பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய டில்லி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் துணைக் கமிஷனருக்கு, தேசிய மனித உரிமை ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
லுடியன்ஸ் டில்லியில் உள்ள செயின்ட் கொலம்பா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவன், ஆசிரியர்கள் மன ரீதியாக துன்புறுத்தியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு, 18ம் தேதி மதியம் 2:30 மணிக்கு, ராஜேந்திரா பிளேஸ் மெட்ரோ ரயில் நிலையத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான்.
இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட நான்கு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் செயலர் பிரியங்க் கனூங்கோ தலைமையிலான அமர்வு, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியது.
மாணவன் தற்கொலை விவகாரத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, 10 நாட்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய டில்லி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் துணைக் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

